சென்னை: நாசர், மதுரிமா, நிலா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள வித்தியாசமான படம் கயா. திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த ஏ.பி.சந்திரபோஸ் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். உலக பட விழாக்களில் இந்த படம் விருதுகளுக்காக தேர்வாகியுள்ளது.
விரைவில் திரைக்கு வர உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் இந்த படத்தின் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. ஆனந்தன் பாடல்களை எழுதியுள்ளார். மைக்ரோ மீடியா நிறுவனம் ஏஐ மூலம் இசையமைத்துள்ளது. மைக்ரோ மீடியா பிலிம்ஸ், டச் ஹார்ட் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சென்னை, ஆந்திரா, உத்தர பிரதேசத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
