ஆண்ட்ரியா மகனாக சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ‘அரசன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ என்ற படத்தின் கதைக்களம் போல் ‘அரசன்’ கதை அமைக்கப்பட்டுள்ளதால், ‘வடசென்னை’ படத்தில் நடித்த ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ கிஷோர், அமீர் ஆகியோருடன் விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், யோகலட்சுமி நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். வரும் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இதில் ஆண்ட்ரியாவின் மகனாக சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையின் தொடக்கத்தில் சிம்பு சிறுவனாக இருக்கும் காட்சிகளில் ஆண்ட்ரியா அவரது தாயாக தோன்றுவார் என்றும், பிறகு அவர் கேங்ஸ்டராக உருவாகும் வகையில் கதை நகரும் என்றும் தெரிகிறது. ஆண்ட்ரியாவின் கேரக்டரை மையப்படுத்தி ‘வடசென்னை’, ‘அரசன்’ ஆகிய படங்களுக்கு இடையே சுவாரஸ்யமான ஒரு தொடர்பை வெற்றிமாறன் உருவாக்கியுள்ளார்.

Related Stories: