×

ஐஸ்வர்யா லட்சுமியின் வெற்றி பட்டியலில் இணைந்த கட்டா குஸ்தி 2

சென்னை: கடந்த 2022ம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. குடும்பங்கள் கொண்டாடிய அப்படத்தின் தொடர்ச்சியாக ‘கட்டா குஸ்தி 2’ என்ற பெயரில் கடந்த 3ம் தேதி திரைக்கு வந்தது. நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கீர்த்தி என்ற வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பல்வேறு தரப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கீர்த்தி என்ற கதாபாத்திரம் இல்லாமல் ‘கட்டா குஸ்தி 2’ படம் முழுமையடையாது என்று சொல்லும் அளவுக்கு, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. காதல், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள், சண்டை காட்சிகள், குடும்ப உணர்வு என அனைத்து பரிமாணங்களையும் ஐஸ்வர்யா லட்சுமி வெளிப்படுத்தி உள்ளார் என படக்குழு பாராட்டியுள்ளது.

வணிக ரீதியான படங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, பெண்களை மையமாக கொண்ட தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.

Tags : Katta Kusti ,Aishwarya Lakshmi ,Chennai ,Vishnu Vishal ,Sella Ayyavu ,Aishwarya ,Lakshmi Kirti ,Kirti ,
× RELATED புதிய அத்தியாயத்தை தொடங்கும் சமந்தா