×

கலெக்டர் வேடத்தில் அருள்நிதி

சென்னை: 90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரிப்பில் சுபா சரவணன் இணை தயாரிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அருள்வான்’. இதில் ஆரவ், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ், பேபி கிருத்திகா, காளி வெங்கட், ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரீஷ் உத்தமன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. கல்வி பயில வாய்ப்பில்லாத மலை கிராமத்தில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு படித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதில் அவள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, லட்சியத்தை அடைய முடிந்ததா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் திரைப்படமாக இது இருக்கும்.

இப்படத்தில் அருள்நிதி மாவட்ட ஆட்சியராகவும், ஆரவ், ரம்யா பாண்டியன் சிறுமியின் பெற்றோராகவும் நடித்துள்ளனர். இவர்களால் குழந்தைக்கு கல்வியை கொண்டு சேர்க்க முடிந்ததா என்பதே கதையின் மையக்கரு. சுகுமார் ஒளிப்பதிவையும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பொறுப்பபை கவனித்துள்ளனர். இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Tags : Arulnidhi ,Chennai ,Ganesh Vinayagan ,S.G. Saravanan ,90 Pictures Productions Private Limited ,Subha Saravanan ,Aarav ,Ramya Pandian ,VTV Ganesh ,Baby Krithika ,Kali Venkat ,Paruthiveeran' ,Saravanan ,Harish Uthaman ,GV ,Prakash Kumar ,
× RELATED நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய சிம்ரன்