சென்னை: கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த ஸ்ருதிஹாசன் நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரைன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் ரசிகர்களுடன் ‘ஆஸ்க் மீ எனிதிங்’ என்ற செஷ்ஷன் நடத்தி வருகிறார். அதில் ரசிகர்கள் அவரிடம் சினிமா மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட விருப்பங்கள், வாழ்க்கை முறை, ஃபேஷன், இசை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் விமான நிலையத்தில் பயணத்திற்காக காத்திருந்த நேரத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி, தனது சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வில் ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டார். அதில் ரசிகர் ஒருவரின் ‘உங்களுக்கு பிடித்த அட்ஹெசிவ் டேப் (Adhesive Tape) பிராண்ட் என்ன?’ என்ற கேள்விக்கு, ‘மிக அருவருப்பான கேள்வி’ என்று பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன். அவரின் இந்த பதில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகைகளுக்கு பிடித்த உணவு, உடை பற்றி கேள்விகள் கேட்பார்கள், இந்த கேள்வி சற்றும் பொறுத்தம் இல்லாததால் ஸ்ருதிஹாசன் அவ்வாறு பதிலளித்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
