×

புதிய அத்தியாயத்தை தொடங்கும் சமந்தா

சென்னை: நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து கதையின் நாயகியாக நடித்து கடந்த ஜூன் 19ம் தேதி வெளியான படம் ‘மா இன்டி பங்காரம்’. தமிழில் இப்படம் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் தனது கற்பத்தை அறிவித்த சமந்தா அடுத்த சில மாதங்களுக்கு நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சோனி லிவ் ஓடிடி தளத்துடன் சமந்தா கை கோர்க்க போவதாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது ஏதேனும் லைவ் நிகழ்ச்சியா அல்லது வெப் தொடரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘மாற்றங்களை ஏற்று கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த ஆண்டு எனக்கு கற்று கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழுடன் புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சிக்காக நாங்கள் உழைத்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Samantha ,Chennai ,Nandini Reddy ,Santosh Narayan ,Sony ,
× RELATED ரசிகரின் கேள்வியால் ஸ்ருதிஹாசன் அப்செட்