×

‘கருப்பு’ 50வது நாளில் ஆர்ஜே பாலாஜி நெகிழ்ச்சி

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, நட்டி நட்ராஜ், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, நடிப்பில் வெளியான ‘கருப்பு’ படம் கடந்த மே 15ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. நேற்றுடன் அப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில் அதற்கான வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட இயக்குனர் ஆர்ஜே பாலாஜி பேசுகையில், ‘‘கருப்பு’ ஒரு நல்ல தொடக்கம்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். நாம் உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் தேடி வரும். இப்படத்தின் வெற்றிக்கு கடவுளின் கருணையும், மக்களின் அன்பும் தான் முக்கிய காரணம். இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை வழங்க இந்த வெற்றி ஒரு வலுவான அடித்தளமாக அமையும்’ என்று தெரிவித்தார். ‘கருப்பு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படைப்புகள் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags : RJ Balaji ,Suriya ,Trisha ,Natty Natraj ,Swashika ,Indrans ,Yogi Babu ,Shivada ,Supreeth Reddy ,Anaka Maya Ravi ,
× RELATED விமர்சனம்: கட்டா குஸ்தி 2