‘கங்குவா’ படத்துக்கு பிறகு அஜித் படத்தை மீண்டும் இயக்கலாம் என சிறுத்தை சிவா பற்றி தகவல் பரவியது. இல்லை, அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் சொன்ன கிராமத்து ஆக்ஷன் கதை, தனுஷுக்கு பிடித்துவிட்டதாம். அதனால் சிவாவின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கப்போவதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. தனுஷ் தற்போது, ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்திலும் ‘அமரன்’ பட டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். அந்த படங்களை முடித்த பிறகு சிவா படத்தை தொடங்க உள்ளார்.

