×

தமிழர்களை நம்பி காத்திருக்கும் சார்மி கவுர்

புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள `ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ என்ற பான் இந்தியா படத்தை தயாரித்துள்ள நடிகை சார்மி கவுர் கூறுகையில், ‘கடந்த 2002ல் ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்துக்காக நான் சென்னைக்கு வந்த நாட்கள் நினைவில் இருக்கிறது. பிறகு சில படங்களில் நடித்தேன். தமிழ் ரசிகர்கள் நிறைய அன்பை பொழிந்தனர். அந்த பாசமும், நெருக்கமும் இப்போது கூட மாறாமல் இருப்பதை உணர்கிறேன். மீண்டும் சென்னைக்கு வந்துள்ளேன். இந்தமுறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக வந்திருக்கிறேன்.

அதே ஆதரவையும், அன்பையும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் ஆகியோர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. புரி ஜெகன்நாத்தின் திரைக்கதை பயணிக்கும் விதமும், விஜய் சேதுபதியின் நடிப்பும் இப்படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன. நேரடி தமிழ் படமாக உருவாகியுள்ளதால், ரசிகர்களை பெரிதும் கவரும். இது ஹிட்டானால், தொடர்ந்து நேரடி தமிழ் படத்தை தயாரிக்க முன்வருவேன்’ என்றார்.

Tags : Charmi Kaur ,Pan India ,Vijay Sethupathi ,Puri Jagannath ,Chennai ,
× RELATED ‘ஓஜி’ படத்தை காட்டி நோயாளிக்கு ஆபரேஷன்