சென்னை: சினிமா துறையில் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வாங்குவதிலும் தட்கல் முறை இருந்து வந்தது. பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை திடீரென அறிவித்தால், உடனே அதற்கு சென்சார் சான்றிதழ் வாங்க முயல்வார்கள். வரிசையில் காத்திருந்து சான்றிதழ் பெற்றால் காலதாமதம் ஆகும். அதனால் தட்கல் முறையில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி தணிக்கை சான்றிதழ் பெற்று வந்தார்கள்.
இந்த முறையில் 3 அல்லது 2 நாட்களுக்குள் அவர்களுக்கு சான்றிதழ் கிடைத்துவிடும். தற்போது இந்த தட்கல் முறை ரத்து செய்யப்பட்டு, இனி பதிவு மூப்பு அடைப்படையில் மட்டுமே தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பெரிய படங்கள் திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்தால் சான்றிதழ் உடனே கிடைக்காத நிலை ஏற்படும்.

