×

விக்ரமின் 63ல் இணைந்த ரியா ஷிபு

‘இருமுகன்’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு `Chiyaan 63’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, கடந்த ஏப்ரல் 17ம் தேதி விக்ரம் பிறந்தநாளில் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. நேற்று முன்தினம் படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸின் மகளும், விக்ரம் நடிப்பில் வெளியான `வீர தீர சூரன்: பாகம் 2’ என்ற படத்தின் தயாரிப்பாளருமான ரியா ஷிபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலியுடன் `சர்வம் மாயா’ என்ற படத்தில், டெலுலு என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான ரியா ஷிபு, தனது இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். தவிர, விக்ரமின் தீவிர ரசிகையும் கூட. இப்படத்துக்காக தொடர்ந்து 50 நாட்கள் விக்ரம் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவரது கேரக்டர் பற்றி படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்திருக்கின்றனர்.

Tags : Riya Shibu ,Vikram ,Anand Shankar ,Sathya Jyothi Films ,Shibu Thamims ,Nivin ,
× RELATED ‘ஓஜி’ படத்தை காட்டி நோயாளிக்கு ஆபரேஷன்