×

போதை கலாச்சாரத்துக்கு எதிரான படம் கொம்பா

 

சென்னை: போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள பான் இந்தியா படம், ‘கொம்பா’. தந்தை, மகன் சென்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தை ராஜபாரதி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இவர், ‘பக்கி பயலுக’ படத்தை இயக்கியவர். மற்றும் நிஷா இஸ்மத், சிங்கம்புலி, சரவணன், சரண்ராஜ், ‘காந்தாரா’ உக்ரம் ரவி நடித்துள்ளனர். கோல்டன் ஆரோ புரொடக்‌ஷன்சுக்காக சண்முகசுந்தரம் தயாரித்துள்ளார். சிவா ஒளிப்பதிவு செய்ய, புரூஸ் இசையில் ராஜபாரதி, புரூஸ் பாடல்கள் எழுதியுள்ளனர். செல்வா எடிட்டிங் செய்ய, முரளி அரங்கம் அமைத்துள்ளார். ஜோஷ்வா சண்டைப்பயிற்சி அளிக்க, அப்துல் நடனக்காட்சி அமைத்தார். சேலம், ஏற்காட்டில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Tags : Rajabharathi ,Nisha Ismat ,Singampuli ,Saravanan ,Charanraj ,Kandhara ,Ukram Ravi ,Shanmugasundaram ,Golden Arrow Productions ,Siva ,Bruce ,
× RELATED பஹத் பாசில் படத்தில் ஷிவதா நாயர்