×

ஒண்ணுமே புரியல உலகத்துல… கீர்த்தி சுரேஷ் புலம்பல்

 

சென்னை: சமீபகாலமாக தனது உடல் எடையை குறைத்தது பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர் கூறுகையில், ‘2013ல் எனது திரைப்பயணத்தை தொடங்கியபோது, பிட்னஸ் பற்றி தெரியாது. ஜிம் எல்லாம் எனக்கு செட்டாகாது என்று நினைத்தேன். ஆனால், 2018ல் ‘மகாநடி’ (நடிகையர் திலகம்) என்ற படத்துக்கு பிறகு பிட்னஸ் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. முறையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் மூலம் ஒன்பது மாதங்களில் 10 கிலோ எடையை குறைத்தேன். உடனே சிலர், ‘நீ பார்க்க ரொம்ப ஒல்லியா இருக்கியே.

உன் உடல் எடையை குறைக்க ஏதாச்சும் சர்ஜரி பண்ணிட்டியா?’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். இது எனக்கு அதிக மன வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் சற்று குண்டாக இருந்தபோது, ‘உடல் எடையை உடனே குறை’ என்று சொன்ன அதே நபர்கள்தான், இப்போது நான் எடையை குறைத்த பின்பு, ‘பழையபடி இருந்தால்தான் நீ அழகா இருக்கே’ என்று சொல்கின்றனர்.இந்த உலகம் என்னதான் நினைக்கிறது என்று எனக்கு புரியவில்லை’ என்றார். அவரது பேச்சு வைரலாகி வருகிறது.

 

Tags : Keerthy Suresh ,Chennai ,Thilakam ,
× RELATED பஹத் பாசில் படத்தில் ஷிவதா நாயர்