×

சில படங்கள் எனக்கு கெட்ட கனவுதான்: சோனாக்‌ஷி சின்ஹா

 

மும்பை: ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ள ‘சிஸ்டம்’ என்ற படம், வரும் 22ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், திரையுலகில் சோஷியல் மீடியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து சோனாக்‌ஷி சின்ஹா கூறியதாவது:
திரைப்படத்தில் நாம் முழு உண்மையை பேச முயற்சித்தால், அப்படத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்படுகிறது. இதனால் கதைகளை தேர்வு செய்வதிலும், உண்மைகளை சொல்வதிலும் திரையுலகினர் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.

படைப்பாளிகளுக்கு இது சற்று கடினமான காலம். சினிமாவில் முன்பிருந்த சுதந்திரம் இப்போது இல்லை. 2010ல் ‘தபாங்’ என்ற படத்தில் நான் அறிமுகமானபோது இருந்த நிலையை விட, இப்போது திரையுலகம் முற்றிலும் மாறிவிட்டது. அப்போது சோஷியல் மீடியாக்கள் இருந்தாலும், இப்போது அதன் ஆதிக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது. இதனால் திரைத்துறை மேலும் கடினமானதாக மாறியுள்ளது.

சில திரைப்படங்கள் எனக்கு ஒரு கெட்ட கனவாக அமைந்தது உண்மைதான். ஒரு கதை சொல்லப்படும்போது ஒருவிதமாகவும், படமாக்கப்படும்போது வேறுவிதமாகவும் மாறிவிடுகிறது. எனினும், நான் நடித்த எந்த படத்தையும் பற்றி குறை சொல்ல மாட்டேன். எனது சுயநினைவுடன்தான் அப்படங்களில் நடிக்கிறேன். மனித வாழ்க்கையில் அனைவரும் தவறுகள் செய்வது இயல்பு. அதையெல்லாம் கடந்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

Tags : Sonakshi Sinha ,Mumbai ,Jodika ,Amazon ,
× RELATED பஹத் பாசில் படத்தில் ஷிவதா நாயர்