- சிவதா நாயர்
- திரிஷா
- விஜய் சேதுபதி
- திவ்யா
- கார்த்தி
- அரவிந்தசாமி
- சி.பிரேம்குமார்
- விக்ரம்
- சிவதா நாயர்
- பஹத் பாசில்
- கோவிந்த் வசந்தா
- இஸ்ஸாரி கணேஷ்
- வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
விஜய் சேதுபதியுடன் திரிஷா நடித்த ‘96’, கார்த்தியுடன் திவ்யா, அரவிந்த்சாமி நடித்திருந்த ‘மெய்யழகன்’ ஆகிய படங்களை இயக்கியவர், ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார். இதையடுத்து ‘96’ படத்தின் 2ம் பாகத்தை இயக்குவார் என்றும், பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்றும் சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் இயக்கும் புதுப்படத்தில் பஹத் பாசில், ஷிவதா நாயர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிந்த் வசந்தா இசை அமைக்க, வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதற்கு முன்பு `வேலைக்காரன்’, `சூப்பர் டீலக்ஸ்’, `விக்ரம்’, `மாமன்னன்’, `வேட்டையன்’, `மாரீசன்’ ஆகிய படங்களில் பஹத் பாசில் நடித்திருந்தார். அவற்றில் முக்கிய கேரக்டரிலும், வில்லனாகவும் நடித்திருந்தார். ஆனால், சி.பிரேம் குமார் இயக்கும் இப்படத்தில் அவர் தனி ஹீரோவாக நடிக்கிறார். திரில்லர் கதையுடன் படம் உருவாகிறது.
