பெரியமேடு பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கு: குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: சென்னை பெரியமேடு என்ச் சாலை மூன்றாவது தெருவில் வசித்து வரும் கலைவாணி என்பவரது வீட்டின் மீது, நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடினர். இதில் அவரது வீடு தீப்பற்றி எரிந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உடனடியாக பெரியமேடு காவல் துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கத்தியுடன் வந்த மூன்று நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியதும், அதில் ஒன்று மட்டும் வெடித்துத் தீப்பற்றியதும் தெரியவந்தது.

குண்டுவீச்சில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த மூன்று நபர்களைப் பிடிப்பதற்காக தற்போது 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்விரோதம் காரணமாக இந்தச் செயலில் ஈடுபட்டார்களா அல்லது போதை மயக்கத்தில் இவ்வாறு செய்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: