பட்ஜெட் ஆவணங்கள் இறைவனுக்கான காணிக்கை இல்லை.! உங்களின் செயல் அரசியல் சட்ட விரோதமானது.. அமைச்சரை வெளுத்த ஆதரவு கட்சி எம்.பி

சென்னை: தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் தமிழக் வேளாண் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு ஆவணத்தை எடுத்து சென்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார்.

அவரது இந்த செயல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் பட்ஜெட் ஆவணத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக கோயிலுக்கு, அதுவும் வெளிமாநிலத்திற்கு எடுத்து சென்று வழிபாடு நடத்திய சம்பவம் தமிழகத்தில் இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொதுவாக பட்ஜெட் போன்ற அரசின் மிக ரகசியமான நிதிநிலை ஆவணங்கள், ஆளுநரின் ஒப்புதல் பெற்று நேரடியாகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லப்பட மாட்டாது.இதனால் அமைச்சரின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – CPI(M) கட்சயின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்பி சு. வெங்கடேசன், அமைச்சர் வினோத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம். எனவே தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல் சட்ட விரோதம்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

 

Related Stories: