சென்னையில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ. 957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாரத் ஹிந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பை வைத்து ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை இன்று(ஆகஸ்ட் 1) ரூ. 200 குறைந்துள்ளது. மே மாதங்களில் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருந்த நிலையில் தற்போது கச்சா எண்ணையினுடைய விலையின் அடிப்படையில் ரூ. 200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்தவித மாற்றமின்றி ரூ. 957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.3,283-ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்தது. மாதத்தின் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: