செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தையும், ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையையும் ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர். சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனம்;
காஞ்சிபுரம் மாவட்டம். ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கண்ணாடி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று. மிதவைக் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு, அந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மிதவைக் கண்ணாடி (Float Glass). பூசப்பட்ட கண்ணாடி (Coated Glass). லேமினேட் செய்யப்பட்ட கண்ணாடி (Laminated Glass) மற்றும் தீ-எதிர்ப்பு, உயர்-பாதுகாப்பு கொண்ட கண்ணாடி உற்பத்தி குறித்து அந்நிறுவன உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் , ரோபோட்டிக் இயந்திரம் மூலம் கண்ணாடி உற்பத்திப் பொருட்களைக் கையாளும் பகுதியினைப் பார்வையிட்ட பின்னர், ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து, வேலைவாய்ப்பு வழங்குவதற்காக செயின்ட் கோபைன் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட சமூக முன்னெடுப்பான ‘கற்றுக்கொண்டே சம்பாதிப்போம்’ பயிற்சி மாணவர்களுடன் கலந்துரையாடி, Learn While Eam (LWE) மற்றும் Nettur Technical Training Foundation (NTTF) இணைந்து, அப்பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளவும். பட்டயம் பெறவும். இந்நிறுவனத்திலேயே பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவதற்குமான வழிவகைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அந்நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையம், நகர்ப்புறக் காடு வளர்ப்பு. வண்ணத்துப்பூச்சித் தோட்டம் போன்ற இயற்கை நிலைத்தன்மை முன்னெடுப்புகள் மற்றும் 4.0 தொழில் புத்தாக்கச் சிறப்பு மையம் குறித்தும் அந்நிறுவன உயர் அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் விளக்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்நிறுவனத்திற்கு வருகைபுரிந்ததை நினைவுகூரும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தகட்டில் கையொப்பமிட்டு. அவ்வளாகத்தில் மரக்கன்று நட்டு. சுவரோவியத்தின் முன்பாக அனைத்து மகளிர் ஊழியர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது. செயின்ட்-கோபைன் நிறுவனத்தின் ஆசிய- பசிபிக் மற்றும் இந்தியப் பகுதிகளுக்கான தலைமைச் செயல் அலுவலர் என்.ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர்கள் ஏ.ஆர். உன்னிகிருஷ்ணன். கே.எஸ். கோபாலகிருஷ்ணன், தேசிய செயல்பாட்டுத் தலைவர் வெங்கட் முருகன் மற்றும் அந்நிறுவன உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலை;
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு வருகைபுரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் , தொழிற்சாலையில் கார் உற்பத்திக்கான உதிரி பாகங்களைக் கொண்டு பொருத்தும் பிரிவு. தரம் உறுதிப்படுத்தும் பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட சோதனைப் பாதைக்கான (Long Test Track) புதிய ரக ரெனால்ட் டஸ்டர் வாகனத்தைத் தாமாகவே முன்வந்து அவ்வளாகத்தில் உள்ள தடம் 3 மற்றும் 4 வழியாக இயக்கி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது. ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் ஸ்டீபன் டெப்ளைஸ் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் ஆய்வு;
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்திற்கு வருகைபுரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம். ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து தொழில் துறை அமைச்சர் மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வுகளின்போது, தொழில் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா. வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ. முனிரத்தினம். எம். ஹரிஷ். தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார். சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன். வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அ. கேத்தரின் சரண்ய, மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: