கிருஷ்ணகிரி: ஜோலார்பேட்டை பகுதியில் 100 நாள் வேலை செய்யும் பெண்மணிக்கு ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி கட்டுமாறு நோட்டீஸ் வந்துள்ளது. வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதால் சம்பளப் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் திகைத்துள்ளார். ஆர்.எம்.ட்ரேடர்ஸ் என்ற நிறுவனம் வைத்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதால் ரூ.2.79 கோடி பணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த ஜி.எஸ்.டி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
