கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் புதிதாக தார்சாலை எப்போது அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சில நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலைகள் தெருக்கள் பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல இடங்களில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் பழுதடைந்து உள்ளன அம்ருத் 2.0 குடிநீர் திட்ட பணிகளுக்காக இந்த தார் சாலைகளில் குழாய் பறிக்கும் பணி நடைபெற்ற காரணத்தால் சாலைகளில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேதமடைந்து நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் 4வது வார்டு அங்காளம்மன் கோவில் தெரு முதல் மேல அக்ரஹாரம், நடு அக்ரஹாரம், மேலக்காரதெரு, கீழ அக்ரஹாரம் வரை தார்சாலை பலப்படுத்துதல் பணி மற்றும் பிச்சம்பட்டி மயானம் செல்லும் சாலை, கோவக்குளம் 3-வது வீதி ஆகிய பகுதிகளில் தார்சாலை அமைப்பதற்கு கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் நடந்தது. ஆனால் 5 மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் பணிகள் தொடங்கப்படாத நிலையில் உள்ளதால், அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ,

மாணவிகள், சத்துணவு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் சாப்பிடுபவர்கள், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம், நூலகம், நீதிமன்ற வளாகம், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம வங்கி, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அங்காளம்மன் கோயில், பூமி நீலவரதராஜ பெருமாள் கோவில், ருக்மணி சத்திய பமா சமேத ராஜகோபால சுவாமி கோவில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம்,

ரயில் நிலையம், ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் வாசிகள், வாகனங்கள் செல்வதற்கு மட்டுமின்றி, நடந்து கூட செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே அரசு ஒதுக்கிய நீதியை சரியாக பயன்படுத்தி உடனடியாக தார்சாலை பலப்படுத்தும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: