கடலூர் : பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு. என்எல்சி விரிவாக்கத்திற்காக நிலம் கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
என்எல்சி விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்ட தவெக அரசுக்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என்எல்சி விரிவாக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் என்எல்சி இந்தியா என்னும் நிறுவனம் நிலக்கரி சுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக மின்சார தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தென் இந்தியா முழுவதும் மின்விநியோகம் செய்யக்கூடிய இந்த என்எல்சி நிறுவனத்திற்காக அப்பகுதி நிலங்களை கையகப்படுத்துவது தமிழக அரசு நில எடுப்பு துறை ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் கையகப்படுத்தும் துறையின் வாயிலாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு தற்போது குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள தென்குத்து கிராமத்தில் 35 விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்கள்.
