×

பிரதானின் ராஜினாமாவை வரவேற்ற அமித்ஷா: மாணவர்களின் நலன் முக்கியம் என கருத்து

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலைப்பாட்டை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ஏற்பட்ட மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தை தேச விரோத சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும், மாணவர்கள் நலன் கருதியும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில்,
‘பாஜக தொண்டர்களுக்கு எந்தவொரு உயர் பதவியையும் விட நாடும், நமது இளைஞர்களும், மாணவர்களுமே மிகவும் முக்கியமானவர்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்தக் கொள்கைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை உறுதி செய்ய மோடி அரசு எடுத்த முடிவுகள் பாராட்டத்தக்கவை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முழுமையான நீதி நிச்சயமாகக் கிடைக்கும். தேசிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டு அமலாக்கம், டிஜிட்டல் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் தர்மேந்திர பிரதானின் சேவையை பாராட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : AMITSHA ,PRADHAN ,NEW DELHI ,EU ,MINISTER ,AMIT SHAH ,DHARMANDRA PRADHAN ,
× RELATED டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான...