நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு வாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மேலும் ஆண்டு முழுவதும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருவோம். அதில் எந்தவித சமரசமும் கிடையாது.

குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் உங்களது தரப்பின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது. இதற்கு யார் பொறுப்பு ஏற்க உள்ளீர்கள். என்ன விதமான பாதுகாப்பு உங்களிடத்தில் உள்ளது. அதனை எவ்வாறு செயல்படுத்துவீர்கள். நீட் தேர்வு விவகாரத்தில் முழுமையான எந்தவித பிரச்சனையும் இனிமேல் நிகழாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்வோம் என்று ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய அரசு தனது விரிவான விவரங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற வினாத்தாள் கசிவு, ஆவணக் கசிவுகள் ஆகியவற்றை தடுப்பதற்கான முன்மொழிவுகளையும் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் ஒன்றிய அரசு விவரிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். முன்னதாக விசாரணையின் போது ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதாடும்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், “நீட் தேர்வு வினாத்தாள்களை ஆண்டுதோறும் விமானத்தில் எடுத்து செல்ல முடியாது” என கருத்து தெரிவித்தனர்.

Related Stories: