காஞ்சிபுரம் அருகே லாரி மீது கார் மோதிய கோர விபத்து –  2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: கீழம்பி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனிமதிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில், தூக்கக் கலக்கத்தில் வந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓசூர் பகுதியைச் சேர்ந்த 5 மார்க்கெட்டிங் ஊழியர்கள் ஓசூரிலிருந்து சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனர். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் வந்தபோது, இவர்களது கார் லாரி மீது மோதிய விபத்தில் கலைச்செல்வி மற்றும் செல்வகணபதி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மனோகரன், ஜெயவேல் உள்ளிட்ட மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டி வந்த மனோகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஜெயவேல் மற்றும் காமராஜ் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்தோரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: