சென்னை: கூட்டுறவுத்துறை கோரிக்கை மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது. வட்டார அளவில் மனுக்கள் மீது முதல் வெள்ளி அன்று பரிசீலனை செய்யப்பட வேண்டும். மாதத்தின் 2வது, 3வது வெள்ளி கிழமைகளில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு கண்ட மனுக்கள் குறித்து மாதாந்திர அறிக்கை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
