சபரிமலை தங்கம் திருட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், உறுப்பினர் கைது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது தொடர்பாக ஏடிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்த சிறப்பு புலனாய்வுக் குழு, சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர்களான பத்மகுமார், வாசு, உண்ணிகிருஷ்ணன் போத்தி உள்பட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தது.

கடந்த ஆண்டும் சபரிமலையில் இருந்து 2 துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவராக இருந்த பிரசாந்த் மற்றும் உறுப்பினர் அஜிகுமார் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு சமீபத்தில் விசாரணை நடத்தியது. இந்நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Related Stories: