புதுடெல்லி: நாட்டின் மிக பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி மூலப்பொருட்களான ஸ்டீல், அலுமினியம் போன்ற உலோகங்களின் விலைகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாருதி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மாடல் கார்களின் விலை ரூ.30 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது. இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும். உற்பத்தி செலவுச் சுமையின் கணிசமான பகுதியை நாங்களே ஏற்றுக் கொண்டோம். ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு கார்களின் மாடலை பொறுத்து மாறுபடும் என்று மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
