அகர்தலா: திரிபுரா மாநில காவல் துறை தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள காவல் தலைமையகத்தில் கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற உள்ளது. அகர்தலாவில் உள்ள சிவில் செயலகத்தில் டிஜிபி அனுராக் தன்கரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டி நல்லு மற்றும் முதல்வர் மாணிக் சாஹா ஆகியோர் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
