கரூர்: முன்னாள் அதிமுக MLA எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான தேர்தல் வழக்கை கரூர் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் வாபஸ் பெறுகிறார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளதால் விஜயபாஸ்கர் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக மதியழகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல். தேர்தல் வழக்கை திரும்பப்பெறுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவு அளித்துள்ளார்.
