×

சிங்கம்புணரி அருகே பெண் டாக்டர் மர்மசாவு

 

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே, பெண் டாக்டர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்தரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் கணபதிபட்டியைச் சேர்ந்தவர் சின்னநம்பி (25). எம்பிபிஎஸ் டாக்டரான இவருக்கும், உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், நல்லூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (28) என்பவருக்கும் 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சென்னையில் இளையராஜா மெடிக்கல் ரெப் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 16ம் தேதி சின்னநம்பி மருத்துவ படிப்பு முடித்து பட்டம் வாங்கினார். நேற்று முன்தினம் கணபதிபட்டிக்கு வந்த சின்னநம்பி, உடல்நிலை சரியில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார்.

நேற்று மாலை வீட்டிலிருந்த சின்னநம்பி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு, சிங்கம்புணரி அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னநம்பி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவர் மயங்கிக் கிடந்த இடத்தில் ஊசி மற்றும் மாத்திரைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து, குடும்ப பிரச்னையில் சின்னநம்பி தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மருத்துவர் மர்மமாக இறந்து கிடந்தது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Singambunari ,Sivaganga ,Sivaganga District, S.S. ,Singampanari ,Sinnanambi ,Putur Ganapathibadi ,
× RELATED தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்...