சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும், சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன். கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி,
விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர். காமராஜரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம். கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
