தேவதானப்பட்டி அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்

தேவதானப்பட்டி, ஜூலை 15: தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு(59). இவர் காமாட்சியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10ம்தேதி தனது டூவிலரில், சக ஊழியரான தன்ராஜ்பாண்டியன் என்பவரை ஏற்றிக்கொண்டு தேவதானப்பட்டியில் இருந்து புல்லக்காபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், இவரது டூவீலர் மோதியது.

இதில் பாலு மற்றும் தன்ராஜ்பாண்டியன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியகா இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: