தஞ்சாவூர், ஜூலை 15: தஞ்சாவூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் இயங்கும் பாபநாசம் வட்டம் அம்மாப்பேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், புத்தூர் அய்யனார் குளம் ஆகியவற்றின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக இன்று (15.7.2026) காலை 10 மணி முதல் மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது.
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in < //www.tntenders.gov.in/ > இணையதள முகவரியினை காணலாம். தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு எண் – 873, 4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல். தஞ்சாவூர் 613001 முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண். 04362 235389 மின்னஞ்சல் adfthanjavur03@gmail.com < mailto:adfthanjavur03@gmail.com >, மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
