நிலக்கரி ஊழல் காங். மாஜி எம்.பி விடுதலை: அமலாக்கத்துறை வழக்கு தள்ளுபடி

 

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் ஏஎம்ஆர் நிறுவனத்தின் சார்பில் நிலக்கரி கொள்முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 1998ல் இருந்து 2016 வரை தொடர்ந்து 3 முறை மாநிலங்களவை எம்பியாக இருந்த விஜய் டார்டாவுக்கு ரூ. 24.60 கோடியை சட்டவிரோத ஆதாயமாக வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. அதை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து முன்னாள் எம்.பி. விஜய் ஜவஹர்லால் டார்டா, அவரது மகன் தேவேந்திர குமார் டார்டா, ஏஎம்ஆர் இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், மனோஜ் குமார் ஜெயஸ்வால் மற்றும் பிறர் தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிபதி சுனேனா சர்மா விசாரித்து வந்தார்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சிபிஐ வழக்கில் முன்னாள் எம்.பி. டார்டா மற்றும் பிறரை கடந்த மார்ச் 27ஆம் தேதியே நீதிமன்றம் விடுவித்து விட்டது. இதையடுத்து முதன்மைக் குற்றத்திலிருந்து ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்ட பிறகு, குற்றத்தின் மூலம் கிடைத்த வருவாய் என்ற கேள்விக்கே இடமில்லை என்று கூறி நீதிமன்றம் விஜய் டார்டா மற்றும் அவரது மகன் தேவேந்திரா ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

Related Stories: