பணியிட மாற்றம் செய்யுங்கள் ரயில்வே போலீசார் கோரிக்கை

விருதுநகர், ஜூலை 13: தென் மாவட்ட ரயில் நிலையங்களின்ன காவல் நிலையங்கள் திருச்சி மண்டல எஸ்பி கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் நேரத்தில் ரயில்வே காவல் நிலையங்களில் இருந்த 23 எஸ்ஐக்களை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இல்லாமல் 300 கி.மீட்டருக்கு மேல் உள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குபணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார். தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆன பிறகும், தற்போதும் அதே இடத்தில பணியை தொடர்கின்றனர். அவர்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கும் நிலையில், கடும் மனஅழுத்தத்தில் பணிகளை சரியாக கவனிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இதுபோல் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீசாரை மீண்டும் ஏற்கனவே வேலை பார்த்த இடத்திற்கு மாற்றம் ெசய்ய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: