கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் மறைவுக்கு அஞ்சலி: தஞ்சையில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

தஞ்சாவூர், ஜூலை 14: கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தஞ்சையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல்-தானி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் நேற்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயில் நிலையம் முன்புள்ள பெரிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Related Stories: