குலவணிகர்புரம், பொன்னாக்குடி, ரெட்டியார்பட்டி, மேலப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

தியாகராஜ நகர், ஜூலை 14: மாதாந்திர பராமரிப்பு பணியை முன்னிட்டு பாளை குலவணிகர்புரம், பொன்னாக்குடி, ரெட்டியார்பட்டி, தருவை, மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (14ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நெல்லை நகர்ப்புற கோட்ட மின் செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வௌியிட்ட செய்திக் குறிப்பு: மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை இன்று (14ம் தேதி) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ் பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பிஎஸ்என். கல்லூரி, ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், ராமச்சந்திரா கார்டன், ராமச்சந்திரா நகர், பரணி பார்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: