பாலமேடு அருகே மது போதையில் நீச்சல் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் மரணம்

அலங்காநல்லூர், ஜூலை 13: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பரளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மதுரையில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தில் சொந்தமான பண்ணை நிலம் உள்ளது. இவரது ஐடியில் பணிபுரியும் நண்பர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரஜித் (39) மற்றும் மணிமாறன், சித்தார்த் ஆகியோர் ஆவர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரனின் பண்ணை தோட்ட வீட்டில் மது அருந்தி விட்டு அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். இதில் பிரஜித் என்பவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் நீச்சல் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளார் மற்ற நண்பர்கள் இருவரும் மது போதையில் நீச்சல் தொட்டிக்குள் இறங்கி குளித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து படியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த பிரஜித்தை காணவில்லை என நண்பர்கள் தேடிஉள்ளனர். இதனால் சந்தேகத்தின் பேரின் நீச்சல் தொட்டியில் இருந்த தண்ணீரை திறந்து விட்டு பார்த்த போது தண்ணீரின் அடியில் பிரஜித் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடனிருந்த நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: