பேரையூர் அருகே டூவீலர் மீது கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்: மற்றொரு விபத்தில் 6 பேர் காயம்

பேரையூர், ஜூலை 13: பேரையூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். சேடபட்டி அருகே பாலார்பட்டி- தாடையம்பட்டி சாலையில் பாலார்பட்டியை சேர்ந்த தினேஷ் (24), தும்மலப்பட்டியை சேர்ந்த சுதர்சன் (20) ஆகியோர் நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இதே வேளையில் அயோத்திபட்டியை சேர்ந்த தினேஷ் (32) எதிரே காரை ஓட்டிவந்துள்ளார். இந்த சாலையில் வந்த திடீரென கார் டயர் வெடித்து எதிரே வந்த டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் டூவீலரில் வந்த தினேஷ், சுதர்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் தினேஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கும், சுதர்சன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து;
டி.கல்லுப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் திறக்கப்படாத நிலையில் அதில் மதுரையில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு பயணிகளை ஏற்றி கொண்டு ராஜபாளையம் திரும்பி சென்று கொண்டிருந்த வேனும், குற்றாலம் சென்று விட்டு அரியலூர் சென்று கொண்டிருந்த காரும் மோதி விபத்திற்குள்ளாயின. இதில் வேன் கவிழ்ந்து அதில் பயணம் செய்த 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக டி.கல்லுப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: