டூவீலர் கேட்டு வாலிபர் தற்கொலை

மதுரை, ஜூலை 13: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் இமாம் ஷெரிப் (23). இவர். பெற்றோரிடம் டூவீலர் வாங்கி கேட்டுள்ளார். அவர்களும் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் டூவீலர் வாங்கி கேட்டு வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதில் மனவருத்தத்தில் இருந்த இமாம் ஷெரிப் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: