செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ரூ.40 லட்சம் மதிப்பீலான போதை பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி தீ வைத்து அழிக்கப்பட்டது. தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. போதை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், மாமல்லபுரம், சட்ராஸ், சித்தாம்பூர், மேல்மருத்தூர், அச்சரப்பாக்கம், படாளம், பாலூர், செங்கல்பட்டு தாலுகா, செங்கல்பட்டு நகரம் என மாவட்டம் முழுவதும் 20 காவல் நிலையங்களில் பல்வேறு இடங்களில் காவல் துறை அதிரடி சோதனை நடத்தி 83 வழக்குகளில் 3 டன் எடை கொண்ட மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் வருவாய்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பள்ளம் தோண்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி போதைப் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
