அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார். போராட்டத்தின்போதே டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அணைக்கரை -ஜெயங்கொண்டம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
