மகாராஷ்டிராவில் கனமழை ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட 3,000 காஸ் சிலிண்டர்கள்

ராய்காட்: மகாராஷ்டிராவில் காஸ் நிரப்பும் ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்ததால் 3,000 சிலிண்டர்கள் படல்கங்கா ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது. படல்கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பன்வெல் தாலுகா சவானே பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் காஸ் நிரப்பும் ஆலைக்கு உள்ளேயும் வெள்ள நீர் புகுந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 சமையல் காஸ் சிலிண்டர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன.

அதில் பல சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிலிண்டர்களை மீட்க மாவட்ட நிர்வாகமும் எச்பிசிஎல் நிறுவனமும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. சிலிண்டர்களை பொதுமக்கள் எடுக்க வேண்டாம். எடுத்தவர்கள் அவற்றை உடனடியாக எச்பிசிஎல் நிறுவனத்திடமோ அல்லது அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகஸ்தரிடமோ, வட்டாட்சியர் அலுவலகத்திலோ ஒப்படைக்குமாறு ராய்கட் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: