சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அதுவும் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், பிறகு மாலை ரூ.1,040 என மொத்தம் ரூ.1,600 வரை குறைந்தது. இதனை தொடர்ந்து சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் ஒரு கிராம் தங்கம் ரூ.13,200க்கு விற்பனையானது.

அனால் இந்த விலை குறைவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை, சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை நேற்று மூன்றாவது முறையாக மாற்றம் கண்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ .13,250க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,06,000க்கு நாளின் இறுதியில் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.

Related Stories: