சென்னை: சென்னை வால் டாக்ஸ் சாலையில் வசந்தகுமார்(21) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தில் மோதி ஏற்பட்ட தகராறில் இளைஞர் வசந்தகுமார் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட வசந்தகுமார், கொலை செய்த 2 சிறார்களும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
