மதுரை: டாஸ்மாக் கடையை மூடக் கோரிய மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மகாலட்சுமி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது கூறியிருந்தார். அந்த மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
