செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

எம்எல்ஏக்கள் பேர வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் தரக்கூடாது என்ற காவல்துறையின் வாதங்களை நிராகரித்தார்.
செந்தில்பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அவரது சகோதரர் அசோக் குமாருக்கும் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அளித்த உறுதியை ஏற்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலையும் மாலையும் இருவரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் நீதிபதி இளந்திரையன் முன்ஜாமின் வழங்கியுள்ளார்.

 

Related Stories: