கருப்பு உளுந்து சட்னி

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 6 (காரத்திற்கு ஏற்ப)
* கருப்பு உளுந்து – 4 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
* பூண்டு – 4-5 பல்
* சின்ன வெங்காயம் – 6
* தக்காளி – 3 (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – சிறிது

தாளிப்பதற்கு:
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு -1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
* வரமிளகாய் – 1

செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, ஜாரில் நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும். இந்த சட்னியானது ஓரளவு நீராக இருந்தால் நன்றாக இருக்கும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கருப்பு உளுந்து சட்னி தயார்.