அமெரிக்கன் ஆனியன் சூப்

தேவையானவை:
பெரிய வெங்காயம் – 4
உப்பு – தேவைக்கு
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீஸ் – ¼ கப்
மஞ்சள், கடுகை ஊறவைத்து அரைத்தது – 1 டேபிள்ஸ்பூன்
வெஜிடபிள் ஸ்டாக் – 1 கப்.

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய தேவையானவை:
தக்காளி – 2
கேரட் – 1
பொடியாக அரிந்த பீன்ஸ் – ¼ கப்
செலரி – ¼ கப்

செய்முறை:
வெஜிடபிள் ஸ்டாக் செய்ய கொடுத்த அனைத்துப் பொருட்களையும் 3 கப் நீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி அந்த தண்ணீரை சூப்பிற்கு உபயோகிக்கவும். இதுதான் வெஜிடபிள் ஸ்டாக். ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெயை போட்டு லேசாக உருக ஆரம்பித்ததும் மெலிதாக நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத் தூள், கடுகு அரைத்த விழுது சேர்த்து வெஜிடபிள் ஸ்டாக்கை ஊற்றி இரண்டு கொதி வந்ததும் சீஸ் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.